கர்த்தர் என்னை விசாரிப்பவர் கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னை தப்புவிப்பவர்
பெயர் சொல்லி கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்தி செல்லுவதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் - நான் - கர்த்தர்
எந்தன் தலையின் முடிகளெல்லாம்
உன்னதரே எண்ணி வைத்துள்ளார்
அவரின் உத்தரவில்லா தொன்றும்
கீழே விழாது என்று அறிவேன் - நான் - கர்த்தர்
தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்ன தான் செய்வான்
எந்தன் கண்ணீரை தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளாரல்லோ - கர்த்தர்
வலது கரத்தை பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவார் அனைவரையுமே
வெட்கப்பட்டு போக செய்வாரே - கர்த்தர்
தேவன் தமது ஐஸ்வரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து ஏசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்? - கர்த்தர்