கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த கல்கள் கூப்பிடும் நீ காணாவிட்டால்
இந்த கல்கள் கூப்பிடும் நீ காணாவிட்டால்
ஆபிரகாமின் புத்திரர் என்போர்
ஆண்டவரை மறந்து விட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க
வல்லவர் உண்டு தெரியுமா - கல்
வேதம் கற்று போதிப்போரும
சத்தியத்தை மறுதலித்தால்
ஆயக்காரர் பாவிகளும்
பரலோகில் இடம் பெறுவாரே - கல்
ராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர்
அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர்
கல்யாண சாலை நிரப்புவார் - கல்