Skip to main content

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே


கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம்பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திதே

கெத்சமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே - கல்வாரி

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உன் மனம் பெரிதே - கல்வாரி

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி