Skip to main content

கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்


கர்த்தர் இயேசுவை
என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை
தினமும் தாங்குவார்

எந்தன் ஆத்ம நேசரே
என்னைத் தேற்றுவார்
அமர்ந்த தண்ணீர்களண்டை
என்னை நடத்துவார் - கர்த்தர்

பெருவெள்ளத்தின் புகலிடம்
எந்தன் இயேசுவே
சத்துரு சேனை சதியினை
வென்ற ஜெயமீவார் - கர்த்தர்

தேவ பாதம் சேருவேன்
பெலன் அடைவேன்
கழுகுபோல் எழும்பி நான்
உயரசென்றிடுவேன் - கர்த்தர்

ஜீவ ஒளியாய்த் திகழ்ந்திட
என்னை அழைத்தாரே
ஜீவ காலம் எல்லாம்
சாட்சியாய் ஜீவிப்பேன் நான் - கர்த்தர்

அவரின் பிரியம் என்னிலே
என்றுமே நிறைவேற
அர்ப்பணம் செய்துமே
அன்பரை சேவிப்பேன் நான் - கர்த்தர்