கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டி பாடிடுவோம்
கை கொட்டி பாடிடுவோம்
அனுபல்லவி
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ - ஆ
பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன் ஆ - ஆ - கீதம்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் - தான்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு - ஆ - ஆ - கீதம்
அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார் - ஆ-ஆ - கீதம்
வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெய வீரன் நம்
மேளவாத்தியம் கைமணிப் பூரிகை
எடுத்து முழக்கிடுவோம் - ஆ - ஆ - கீதம்