Skip to main content

கண்ணீரை துடைப்பவர் இயேசு கவலை தீர்ப்பவர் இயேசு


கண்ணீரை துடைப்பவர் இயேசு
கவலை தீர்ப்பவர் இயேசு
முற்றும் ஜெயம் தரும் இயேசு
முடிவும் துவக்கமும் இயேசு

சோதனையில் பெலன் தருவார்
வேதனையில் துணையிருப்பார் - (2)
துதித்திடுவேன் உயர்த்திடுவேன்
தூயவரில் நான் களித்திடுவேன் - (2) - கண்ணீரை

பகைவரெல்லாம் சூழ்ந்தபோதும்
பாதுகாப்பாய் உடன் வருவார் - (2)
வாதை எந்தன் கூடாரத்தை
அணுகாமல் என்றும் காத்திடுவார் - (2) - கண்ணீரை

துதியின் உடை உடுத்திடுவார்
துயரமெல்லாம் விலகச் செய்வார் - (2)
சாம்பலம் எந்தன் வாழ்வினிலே
சிங்காரத்தை அவர் கொடுத்திடுவார் - கண்ணீரை