Skip to main content

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு - வெற்றி உண்டு


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு - வெற்றி உண்டு

என்னென் துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன் - கிறிஸ்து

என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன் - கிறிஸ்து

சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பரித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார்
காலாலே மிதித்துவிட்டார் - இயேசு - கிறிஸ்து

பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் - நான் - கிறிஸ்து

மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
இயேசு கண்ணீரெல்லாம் துடைப்பார் - கிறிஸ்து