கர்த்தர் நல்லவர் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
மகிழ்ந்து பாடு அல்லேலூயா
புகழ்ந்து பாடு அல்லேலூயா
சேர்ந்து பாடு அல்லேலூயா
துதித்து பாடு அல்லேலூயா
களித்து பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
ஆல்லேலூயா (18)
வானங்களை விரித்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியை படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனை படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனை படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - மகிழ்ந்து
செங்கடலைப் பிளந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களை அழித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளை கவிழ்த்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - மகிழ்ந்து
தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தருபவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - மகிழ்ந்து