Skip to main content

கிருபை! எம்மைச் சூழ்ந்து கொள்ளும் - தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்


கிருபை! எம்மைச் சூழ்ந்து கொள்ளும் - தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

யோர்தானைக் கடந்து வந்தோம் - எங்கள்
இயேசுவின் பெலன் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் - கிருபை

தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியைச் செய்கின்றார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசர்கள் வேண்டிடுவோம் - கிருபை

கிருபை இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்
காத்திருந்தே அடைவோம் - கிருபை

ஆண்டுகள் நம்மையினால் - முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் - கிருபை

ஜாதி ஜனங்களையும் - வந்து
மோதி அசைத்திடுவார்
காத்துத் தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார் - கிருபை

உண்மையும் நேர்மையுமாய் - இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் - கிருபை