கர்த்தரின் திருவிருந்து பக்தியோடதையருந்து ஆயத்தத்தோடின்று அதில் சேர்வதே நன்று
ஆயத்தத்தோடின்று அதில் சேர்வதே நன்று
சரணங்கள்
சுத்த நல்மனச்சாட்சி இரத்தத்தால் தெளிக்கப்பட்ட
உத்தம இருதயம் மெத்தவும் அவசியம்
தன்னைத்தான் சோதித்து தன்னையே நிதானித்து
இன்று நீர் பங்கு பெறில் அன்று நியாயம் தீர்க்கப்படீர்
பொல்லாப்பு துர்க்குணம் இல்லாமலகற்றுவீர்
துப்புரவு உண்மையுடன் இப்போதாசரித்திடுவீர்
அப்பம் என் சரீரமே இப்பாத்திரம் என் இரத்தமே
தப்பாது பங்கெடுப்பீர் என்றேசு மொழிந்தனரே
மெய்யாய் நம் நோய்களை மெய்தனில் சுமந்த அப்பம்
வாங்கி நீர் புசித்து நீங்குவீர் வியாதியினின்றும்
ஜீவனின் இரத்தத்தால் பாவமன்னிப் புண்டாம்
சுத்தமும் ஜீவன் பெற இரத்தத்தை பானம் செய்வீர்
நமது பÞகா இயேசு கிறிÞது நமக்காக அடிக்கப்பட்டார்
அதை நினைவு கூறும்படி இதை செய்வீரவர் வருமளவும்