Skip to main content

கர்த்தரை நான் எக்காலமும் வாழ்த்திடுவேன், வணங்கிடுவேன்


கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன், வணங்கிடுவேன்
அவர் துதி என் நாவிலே
என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா!

யெகோவாவை நான் உள்ளவரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதைக் கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார்
அல்லேலூயா! (8) - கர்த்

அல்லேலூயா நான் பாடிடுவேன்
அவரை ருசித்ததினால்
அனுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன்
அல்லேலூயா! (8) - கர்த்

சிங்கக் குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷமடைவாரே
அல்லேலூயா! (8) - கர்த்