கனிவின் கரங்கள் தினம் வழி நடத்தும் நம் ஜீவிய கால மட்டும்
நம் ஜீவிய கால மட்டும்
பயம் வேண்டாம் இனி கர்த்தர் தணையாய் உண்டு
புவி யாத்திரை கடந்திடுவோம்
பகலில் மேக ஸ்தம்பமாய் இராவினில் அக்கினித் தூண்களாய்
தாக ஜலத்திற்காய் பிறந்தார் பாறையை
ஜீவ மன்னா பட்சணமாய்
தந்த யெகோவாவை வாழ்த்திடுவோம் - கனிவின்
கசந்தமாரா வாழ்வினை மதுரமாக மாற்றியே
தேனிலும் இனிய வாக்குகளாலே
தேற்றி நம்மை ஆற்றிடுவார்
அந்த நல் தேவனை வாழ்த்திடுவோம் - கனிவின்
யோர்தானை போன்ற துன்பமும் துயரமும் வந்தபோதிலும்
தேவ புயங்களின் பெலமதினால்
சோர்வில்லாமல் கடந்து வந்தோம்
வல்ல நல் தேவனை வாழ்த்திடுவோம் - கனிவின்
சத்துருசேனை எழும்பியே நமக்bதிராய் வந்தாலும்
நமக்காய் யுத்தம் செய்திடும் கர்த்தர்
சேனையதிபனாய் முன் செல்கின்றார்
அவரின் கரங்களை பற்றி கொள்வோம் - கனிவின்