Skip to main content

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்


அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
கல்வாரின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் - உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க ஏசு துடிக்கிறார்

மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள் - அன்பின்

வியாதிகள் தொல்லையோ தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் ஏசு பார் - அன்பின்

வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதோ
மரணம் வென்ற ஏசு பார் - அன்பின்