Skip to main content

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ நீயும் வா உந்தன் நேசர்


அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

பாவத்தை யேற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்hத காட்சியே
கண்டிடும் வேண்டிடும் பாவபாரம் நீங்கிடும் - அழை

நோயையும் ஏற்றவர் - பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை - நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே - நேயமாய் அழைக்கிறார் - அழை

துன்பம் சகித்தவர் - துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே - அண்ணல் இயேசழைக்கிறார்
இன்புறும் நெஞ்சமே - துரிதமாய் நீ வாராயோ - அழை

அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ - அழை

கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸதிகளடைந்தாரே - கட்டுகளருத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் - உண்டு மீட்புனக்குமே - அழை

சாந்த சொரூபனே - சத்திய வாசனே
வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே - தந்துனையழைக்கிறார் - அழை