Skip to main content

அழுது ஜெபிக்க வேண்டும் ராஜா - இயேசு ராஜா நான்


அழுது ஜெபிக்க வேண்டும்
ராஜா - இயேசு ராஜா நான்
அழுது ஜெபிக்க வேண்டும் ராஜா
ஆறாக ஓடும் அந்த கண்ணீளீலே
உம் பாதம் கழுவி நான் கதற வேண்டும்

ஆசீர்வாத மழை பொழிய வேண்டும்
அதில் நான் தினம் தினமும் நனைய வேண்டும் (2)
வேறூன்றி வளர வேண்டும் உம்மில் (2)
திராட்சை செடியை போல படர வேண்டும்

கடுகளவு விசவாசமிருந்தால்
காட்டத்தி மரத்தை பிடுங்கி கடலில் நடலாம் (2)
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் (2)
அந்த விசுவாசமே நம்மை காக்கும்

இரக்கத்தின் ஐசவரியமுள்ள
என் இயேசு ராஜனே என் அருமை இரட்சகா (2)
உம்மையே என்னென்றும் துதிப்பேன் (2)
உம் நாமம் போற்றி மகிழ்ந்துவிடுவேன்