Skip to main content

அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே என் தேவன் செய்த அற்புதங்கள் எண்ணற்றதே


அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே
என் தேவன் செய்த அற்புதங்கள் எண்ணற்றதே

தண்ணீரை திராட்சரசமாகவே மாற்றினார்
அற்புதர் இயேசுவே (2)
வியாதியின் வேரை வீழ்த்தியே வெற்றியை ஈந்தாரே
அற்புதர் இயேசுவே (2) - அற்புதர்

கடலின் மேல் நடந்து வந்து "பயப்படாதே" என்றாரே
அற்புதர் இயேசுவே (2)
காற்றையும் கடலையும் "இரையாதே" என்றாரே
அற்புதர் இயேசுவே (2) - அற்புதர்

குருடரின் கண்களைத் தொட்டு தானே திறந்தாரே
அற்புதர் இயேசுவே (2)
குஷ்டரின் ரோகத்தை "சுத்தமாகு" என்றாரே
ஆற்புதர் இயேசுவே (2) - அற்புதர்