Skip to main content

பாராயோ கல்வாரி சிலுவையில் தூய தேவ அன்பை


பாராயோ கல்வாரி சிலுவையில்
தூய தேவ அன்பை
அழைக்கிறார் இயேசு உன்னை
நம்பியே நீயும் வா

பாவத்தில் உழன்று மாண்டிடாதே
அழியும் பூலோகம் சீக்கிரத்தில்
இரட்சண்ய நாளதில் வந்திடாயோ
தள்ளாது தம்மிடம் சேர்த்திடுவார் - அழைக்கிறார்

கலக்கும் உலகம் அஞ்சிடாதே
கல்வாரி குருசை நோக்கியே பார்
உனக்காக யாவும் செய்திட்டாரே
உன்னையும் தந்திடு கர்த்தரிடம் - அழைக்கிறார்

கைவிடும் மாந்தரை நம்பிடாதே
நம்பிக்கை நாயகர் இயேசு உண்டே
தாயினும் மேலாய் நேசித்திடும்
இயேசு போதும் என்றென்றுமே - அழைக்கிறார்

தவிக்கும் உலகம் ஓர் நாளிலே
தஞ்சம் உனக்குண்டு இயேசுவிடம்
தயங்காதே என்றும் கலங்காதே
கர்த்தர் தம் கரத்தால் அணைக்கிறார் - அiக்கிறார்