Skip to main content

போற்றி துதித்திடுவோம் அன்பின் இயேசுவையே


போற்றி துதித்திடுவோம்
அன்பின் இயேசுவையே
ஸ்தோத்திரமே துதிபலிகள்
ஆனந்தமாய் செலுத்திடுவோம்

நம்பிடும் மாந்தரை காப்பவராம்
நம்பிக்கை யாவும் தருபவராம்
மகழ்வுடனே துதித்திடுவோம்
மகிபன் இயேசுவை உயர்த்திடுவோம் - போற்றி

அதிசயம் அற்புதம் செய்பவராம்
ஆயிரம் நன்மைகள் அளிப்பவராம்
நோய் பிணிகள் நீக்கிடுவார்
தெய்வீக சுகமே தந்திடுவார் - போற்றி

தாழ்வினில் இருந்து தூக்கினாரே
தயவுடன் நம்மை நடத்தினாரே
வாழ்த்திடுவோம் போற்றிடுவோம்
ஆயிரம் ஸ்தோத்திரம் செலுத்திடுவோம் - போற்றி

காலமெல்லாம் நம்மை கண்மணிபோல்
கரம் பிடித்து தினம் நடத்தினாரே
தோளினிலே சுமந்தனரே
கன்மலை தேவனை துதித்திடுவோம் - போற்றி

ஆவியில் என்றும் களித்திடவே
அற்புதமாய் நம்மை மீட்டனரே
ஆனந்தமாய் துதித்திடுவோம்
ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் - போற்றி