Skip to main content

புது கிருபை அளித்திடுமே புகலிடமும் தந்திடுமே


புது கிருபை அளித்திடுமே
புகலிடமும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே

பரதேசியாக திரிந்தேனய்யா
பாசமாய் தேடினீரே
இது காறும் காத்தீர் இனியும் நடத்தும்
இயேசுவே இரட்சகனே - புது

ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகைள விலக்கிடவே
உந்தன் வழிதனை போதியுமே - புது

உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே - புது