Skip to main content

பரிசுத்தமான பரனே என்னை பாத்திரன் ஆக்கிடுமே (2)


பரிசுத்தமான பரனே என்னை
பாத்திரன் ஆக்கிடுமே (2)
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாகிடுமே (2)
கர்த்தருக்குப் பரிசுத்தம்
கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும்
பரமனே சுத்தமாக்கும் (2)

அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண
அடிமைக்கு உதவி செய்யும்
ரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு
இரங்கிடும் இந்நேரமே - கர்த்தருக்கு

பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக
காத்திட உதவி செய்யும்
நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்தி
பரிசுத்தம் தந்திடுமே - கர்த்தருக்கு

தூசியை உதறி விட்டெழுந்திட எனக்கு
தூயனே துணை bச்கூழ்ர
வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று
உம் ஆவியை தந்திடுமே - கர்த்தருக்கு