Skip to main content

பல்வவி பாடியே பரனைத் துதி மனமே - துதி மனமே


பல்வவி
பாடியே பரனைத் துதி மனமே - துதி மனமே
கொண்டாடித் துதி மனமே
சரணங்கள்

சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த
நாதனைத் துதி மனமே
நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்
நாதனைத் துதி மனமே
ஆதரவாய் எம்மைக் காத்ததினாலே
தேவனைத் துதி மனமே - பாடியே

நானிலந்தனிலெம் பாவங்கள் போக்கிய
நாதனைத் துதி மனமே
என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
நாதனைத் துதி மனமே
கானகமதிலே ஜீவ ஊற்றான
தேவனைத் துதி மனமே - பாடியே

கிருபையாய் ஈந்த திருப்பலிக்காக
நாதனைத் துதி மனமே
கோரமாய் துதி மனமே
கோரமாய் வந்த நோய்களைத் தீர்த்ததால்
நாதனைத் துதி மனமே
தாபரமாய் எமைத் தாங்கியதாலே
தேவனைத் துதி மனமே - பாடியே

கஷ்டமானாலுமi நஷ்டமானாலும்
நாதனைத் துதி மனமே
பஞ்சம் பசியுடன் பங்கம் வந்தாலும்
நாதனைத் துதி மனமே
ஜீவனானாலும மரணமானாலும்
தேவiத் துதி மனமே - பாடியே

ஏகமாய் எம்மை அன்பினால் இணைத்த
நாதனைத் துதி மனமே
அகமதை ஆவியால் ஆலயமாக்கிய
நாதனைத் துதி மனமே
தூதரையும்விட மகிமையை அருளிய
தேவனைத் துதி மனமே - பாடியே

உன்னத அழைப்பால் எம்மையே தெரிந்த
நாதனைத் துதிமனமே
பெலமுள்ள கரமதில் செங்கோலுமாக்கிய
நாதனைத் துதிமனமே
நீடூழி காலமாய் சாலேமில் வாழ்ந்திடத்
தேவனைத் துதிமனமே - பாடியே