Skip to main content

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே


பரிசுத்த ஆவியே
பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே
குறைகள் தீர்ப்பவரே

தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
ஊள்ளத்தின் ஆறுதலே - எங்கள் - பரிசுத்த

பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் - என்றும் - பரிசுத்த

அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கொன்று
முத்திரையானவரே -எங்கள் - பரிசுத்த

விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் - பரிசுத்த