Skip to main content

பாடுவேன் நான் என்றும் புதுப் பாடல்கள் தேடுவேன் நான் என்றும் தெய்வ சிநேகமே


பாடுவேன் நான் என்றும் புதுப் பாடல்கள்
தேடுவேன் நான் என்றும் தெய்வ சிநேகமே
தியாகத்திலே சங்கீதமே
சிநேகத்திலே ஆனந்தமே

வேதனையால் எந்தன் உள்ளம்
சோர்ந்திடும் போது இயேசு நாதா
உம் அருகே வந்திடுவேன்
தங்கிடுவேன் உம் கைகளில்

லோக பாரம் மாறிடுமே
துன்பங்களும் நீங்கிடுமே
உந்தன் ராஜ்யம் நித்தியமதே
சேர்த்திடுமே சொர்க்க ராஜ்யம்

கல்வாரியைக் கண்டிடுவேன்
காருண்யவான் என் நாதனே
காலமெல்லாம் உம் சேவைக்கே
ஜீவிப்பேன் நான் என் இயேசுவே