Skip to main content

பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்


பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம்

மகனாகத் தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்கவைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே - ஆராதிக்

சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்குப் பாத்திரரே
மங்காத பிரகாசமே - ஆராதிக்

ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும் - ஆராதிக்