பல்லவி இயேசு பாலனாய் பிறந்தார் (2)
இயேசு பாலனாய் பிறந்தார் (2)
அனுபல்லவி
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்
உன்னதத்தில் தேவ மகிமை
புமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவதூதர் பாடிட - இயேசு
விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மனுடவதாரமாய்த்
தம்மைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும் - இயேசு
ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் - இயேசு
கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் - இயேசு
அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும் - இயேசு