போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பொற்பரன் இயேசுவையே
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர்போல் வேறில்லையே
சரணங்கள்
தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெமை சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம் - போற்றி
கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியும் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே - போற்றி
ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மை தம் சுதராய் - போற்றி
ஆதி அப்போÞதல தூதுகளால்
அடியாரை Þதிரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிÞதுவின் நற்கந்தமாக்கினாரே - போற்றி
சீயோனே ! மா சாலேம் நகரே !
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்த்தலத்தே - போற்றி