Skip to main content

பரலோக நாடெந்தன் இன்ப நாடா மெனக்கு என்று நான் கண்டு களிப்பேனோ


பரலோக நாடெந்தன் இன்ப நாடா மெனக்கு
என்று நான் கண்டு களிப்பேனோ
ஆ மகிமையே ஆ பேரின்பமே
ஏன்று நான் கண்டானந்திப்பேனோ - பரலோக

சேவை செய்திடுவார் தூதர்கள் - நானங்கு
சேவிப்பேன் நித்தியம் நேசரை
ஆ என் இன்பமே ஆனந்த பாக்கியமே
நுhவினாலியம்பவு மேலதே - பரலோக

சொர்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை ஶி அழியாத
சொர்ண மயமான வேலைகள்
சோபனக் கீதமே சுந்தர நாடதே
சுத்த ரொரு மித்து வாழ்வாரே - பரலோக

தெய்வ சித்தம் செய்யும் பிள்ளைகள் - ஜீவிப்பார்
மாதா பிதா மற்றும் சோதரர்
உத்தம ஜீவிகள் சொர்கத்தின் வாசிகள்
கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள் - பரலோக

இயேசுவே என் சம்பத்தல்லவோ - நிச்சயம்
என்று மழியா சுதந்திரம்
பூலோக இன்பத்தைக் குப்பை யென்றெண்ணினேன்
இயேசுவே எந்தனின் இன்பமே - பரலோக

வெறுத்திடுவேன் எந்தன் ஜீவனை லோகத்தில்
செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
மாயை மாயையே லோகத்தின் இன்பமே
வாடா முடி சூட ஏகுவேன்