யெகோவாயீரே (2) யாவுமெனக்காய் முடித்தீரே லோக ஸ்தாபன முதலே
யெகோவாயீரே (2) யாவுமெனக்காய் முடித்தீரே
லோக ஸ்தாபன முதலே
கிறிஸ்து இயேசுவிலே முன்
அறிந்து அழைத்தனரே
ஆபிரகாமுக்காய் தேவ பர்வதத்தில்
ஆயத்தமாக்கி நீர் வைத்ததோர் ஆட்டைப் போல்
தாயினிடத்தில் யான் சேயனாய்த் தோன்றுமுன்
தற்பரனே யாவும் கருதி வைத்தீர் - யெகோவா
கானகமதிலே என்னைப் பின் தொடர்ந்தே
ஞானகன்மலையாய் தாகங்கள் தீர்ப்பாரே
வான மன்னாவாய் உம் மாறிடா வார்த்தையால்
மாற்றுகிறீர் மண்ணின் சாயலென்னில் - யெகோவா
பாரி லென் கரங்கள் போரினில் ஜெயிக்க
நீரே உம் நித்திய புயத்தால் தாங்கியே
ஆனந்த தைலத்தால் உள்ளம் வழிய
அன்பரே நீர் அபிஷேகித்தீர் - யெகோவா
அன்பரே உம்மிலே அன்பு கூர்ந்தோருக்கு
ஆயத்தமாக்கிய ஆனந்த நம்மைகள்
கண்கள் கண்டதில்லை கேட்டறிந்ததில்லை
காணயான் ஆவியால் கருணை செய்தீர் - யெகோவா
அந்த நாள் வரையும் எந்தனை காப்பீர்
எந்தையே உமக்காய் சொந்தமாயளித்தேன்
சந்ததம் நிலைக்கும் சீயோன் பர்வதம் போல
என்றும் கிருபையினால் இருப்பேன் - யெகோவா