யேகோவா நிசி யேகோவா நிசியை போற்றி பாடுவோம்
போற்றி பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக்கொடியே - அல்லேலூயா (2)
வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறுகொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ?
மீறு மெதிரி சதிகளுக்கு மிரளவோ
யூத சிங்கம் யுத்த சிங்கமே - யேகோவா
கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே - யேகோவா
எதிரி வெள்ளம் போல ஏறி வருகிறான்
இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா?
கர்த்தர் வல்ல நாமமே - யேகோவா
நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவ தேவ சேனை அல்லவா? - யேகோவா