ஓ! பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ!
ஓ! பாவங்கள் எத்தனையோ
என் கைகள் புரிந்தனவோ!
நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி
என் கைகளை கழுவிடாதோ?!
ஓ! பாவங்கள் எத்தனையோ
என் கால்கள் புரிந்தனவோ!
நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி
என் கால்களைக் கழுவிடாதோ?!
ஓ! பாவங்கள் எத்தனையோ
என் இதயமும் இழைத்ததுவோ!
நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி
என் இதயத்தை கழுவிடாதோ?!
ஓ! பாவங்கள் எத்தனையோ
என் சிரசதும் எண்ணியதோ
நின் சரசதில் வழிந்தோடும் செங்குருதி
என் சிரசதை கழுவிடாதோ?