ஏழையெனக்கு அடைக்கலம் அவரே பலமுள்ள கன்மலை வெளிச்சமுமே
ஏழையெனக்கு அடைக்கலம் அவரே
பலமுள்ள கன்மலை வெளிச்சமுமே
கூப்பிடும் போது பதில் தந்திடும் நல்
பரிசுத்தராம் என் இயேசு பரன்
வழிதப்பி நடந்த என் கால்களை நீர்
ஜீவ பாதையில் நடத்தினீரே
உருவாக்கினார் என் ரூபத்தையும்
புகழ்ந்து பாடிடுவேன் காலமெல்லாம் - ஏழை
கார்முகில் போல் துன்பம் வந்த நேரம்
காருண்ய சிறகின் மறைவில் என்னை
காத்த நல் தயை நான் வர்ணிப்பேனே
கல்வாரி அன்பரை காலமெல்லாம் - ஏழை