Skip to main content

ஏழை மனு உருவை எடுத்த ஏசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்


ஏழை மனு உருவை எடுத்த
ஏசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே

கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள்முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே

அவர் தலையையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
ஆருமை ரட்சகர் தொங்கினார் தினியே
ஆந்தப் பாடுகள் உன்னை மீட்கவே - ஏழை

அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவ கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் - ஏழை

மாயை உலகம் அதையும் நம்பாதே
மனு மக்கள் மனமும் மாறிப்போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் - ஏழை

இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப ஏசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தர காத்து நிற்கிறாரே
அண்ணல் ஏசுன்னை அழைக்கிறாரே - ஏழை