Skip to main content

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே


ஒப்புவித்தேன் ஐயனே
உம் சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே

சுட்டெரிக்கும் அக்கினியாய்
சுத்திகரித்தெம்மை மாற்றிடுமே
ஆவி ஆத்துமா சரீரமே
ஆத்தும நேசரே பiக்கின்றேன் - ஒப்பு

கண்ணீர் கவலை பெருகுதே
கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே
உலக சிநேகம் பின்னே வைத்தே
உறுதியாக பின் சென்றிட - ஒப்பு

அத்திமரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
தூய கிருபை தந்தருளும் - ஒப்பு

எந்தனின் சிந்தை முன்னறிவீர்
எந்தனின் பாதை நீர் அறிவீர்
நல்ல பாதை நடந்திட
நாதனே என்னையும் அர்ப்பணித்தேன் - ஒப்பு

காடு மலைகள் போன்ற இடம்
கண்டு என்றும் அஞ்சிடாமல்
அழியும் ஆத்தும தரிசனம்
ஆண்டவா என்னிலே ஈந்தருளும் - ஒப்பு

சோதனை எம்மை சூழ்ந்திடினும்
சோர்ந்திடா உள்ளம் தந்தருளும்
ஜீவக்கிரீடம் முன்னே வைத்தே
ஜீவிய காலம் நடந்திட - ஒப்பு