Skip to main content

ஜீவ தேவ வல்லவர் அதிசயம் செய்பவர்


ஜீவ தேவ வல்லவர்
அதிசயம் செய்பவர்
கூடாது மனிதரால்
தேவனால் யாவும் கூடிடுமே

செயலினில் வல்லவர்
யோசனை கர்த்தராம்
கர்த்தர் நாமம் வல்ல தேவன்
அதிசயம் செய்திடுவார் - ஜீவ

ஓங்கிய புயத்தினால்
ஜனமதை நடத்தினார்
தேவன் நம்மை தம் புயத்தினால்
என்றும் காத்து நடத்திடுவார் - ஜீவ

மனிதனின் வழிகளை
நோக்கிடும் கர்த்தராம்
நமது செய்கை அறிந்து தேவன்
பலனதனை அளித்திடுவார் - ஜீவ

மேகத்தில் தோன்றிடும்
இயேசுவை சந்திக்க
ஆவி ஆத்மா தேகம் காத்து
ஆயத்தமாய சென்றிடுவோம் - ஜீவ