Skip to main content

ஜெயங்கொண்ட தாசர்களே நாம் ஜெபித்திடுவோமே நாம் ஜெயித்திடுவோம்


ஜெயங்கொண்ட தாசர்களே நாம்
ஜெபித்திடுவோமே நாம் ஜெயித்திடுவோம்
ஜெய சேவையின் வீரர்களே நாம்
ஜெய கிறிஸ்துவின் பின் செல்வோம்
செல்லுவோம் நாம் வெல்லுவோம்
ஆர்ப்பரிப்போம் -2
அன்பரின் வருகையை எதிர்நோக்குவோம்
துன்பங்கள் நீங்கிடும் இயேசுவின் நாமத்தில்
ஆல்லேலூயா என்றும் பாடுவோம்

மீட்படைந்த வீரர்களே நாம்
கிருபை பெருகிட நாம் மகிமையடைவோமே
இயேசு கிறிஸ்துவின் சேனை வீரர் நாம்
ஜீவ கிறிஸ்துவின் பின் செல்லுவோம் - செல்லு

எரிகோவின் கோட்டை நொறுங்கிட
ஸ்தோத்தரிப்போமே நாம் துதித்திடுவோமே
ஆடிப்பாடியே களி கூறுவோம்
வல்ல கிறிஸ்துவின் பின் செல்லுவோம் - செல்லு

சீயோனின் செழுமை காணுவோம்
ஜீவ ஆவியே எங்கும் நிறைந்து வழியுதே
மங்கா ஒளி பறந்து வாழுவோம்
நித்திய கிறிஸ்துவின் பின் செல்லுவோம் - செல்லு