ஜெபிக்கும் வாஞ்சை எனக்கு தாரும் தேவா
எனக்கு தாரும் தேவா
விண்ணப்ப ஆவியால்
என்னை நிரப்பும் தேவா
கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
கர்த்தரே எனக்கு இன்று கிருபை தாரும்
காலம் நேரம் மறந்து உந்தன்
சமூகத்தில் ஜெபிக்க
கிருபை தாருமே (2)
பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
திறப்பின் வாசலில் நிற்க கிருபை தாரும்
தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
பாரத்தோடு ஜெபிக்க
கிருபை தாருமே (2)
உருக்கமாய் உம்மைப்போல் ஜெபித்திடவே
உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே
இதயம் நொருங்கி பெறு மூச்சோடு
ஊக்கமாய் ஜெபிக்க
கிருபை தாருமே (2)