Skip to main content

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே


ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே

இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே -ஜெபமே

சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
மாமிசத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே - ஜெபமே

எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்த வான்கள் பணிகள் பலனுக்கு
துதிÞதோத்திரம் ஜெபம்வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே - ஜெபமே

முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே - ஜெபமே