Skip to main content

ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே - நரர் சேயர்கள் துதித்திடும் திருவடியே


ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே - நரர்
சேயர்கள் துதித்திடும் திருவடியே

அனுபல்லவி
பாரில் பரனாக நீரே பாவிகட்காய்ப் பலியானீர்
அன்பால் என்னை ஆட்கொண்டானே அதிரூப சுந்தரனே

பாவயிருள் நீக்கிப் பாரினிலே - பரன்
பாவிகள் பாவம் போக்க பலியானீரோ
சாபத்தை முற்றும் தொலைத்திடவே சக்தியாக உயிர்திட்டிரோ
அரூபா கொரூபா அற்புதனே ஆனந்த பொற்பரனே - ஜெக

எந்தனின் நீதியெல்லாம் கந்தையல்லோ நீர்
என்தனின் சிறப்பான தாரகமே
அன்பே ஆனந்தப் பேரொளியே அதியந்தமில்லாப்பரனே
கதியே நிதியே கருணாகரா காத்திடும் புகலிடமே - ஜெக

ஏழையென்னில் தாகம் கொண்டதாலே - எழில்
ஏகனே எனக்கு திவ்யாகாரமே
தாகமிஞ்சி வாடுறேனையா தனியானேன் இத்தாரணியில்
காசினியில் நேசரைப் போல் காணுவேனோ கல்வாரியின் காந்தரூபா - ஜெக

எப்போ உம்மைக் கண்டு மகிழ்ந்திடுவேன் - அண்ணல்
இயேசுவே இன்பமாக மணாளனே
கன்மலைவெடிப்பில் தங்குமென் உத்தமியே என்றழைக்கும் சத்தம்
கேட்கும் கீதம் ஆ! இன்பமே கூறிடீரோ அன்பரே - ஜெக