Skip to main content

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்


ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்

அனுபல்லவி
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன் - அல்

அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார் - அல்

நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார் - அல்

உண்மை தேவனே
உருக்கம் நிறைந்தவர்
உன்னை காப்பவர்
உறங்குவதில்லையே - அல்