ஜெபவேளை எமக்கானந்தம் - என்றும் ஜெபமில்லா ஜெயமில்லை
ஜெபமில்லா ஜெயமில்லை
ஜெபம் எங்கள் ஜெயமே
இருள் சூழ்ந்தவனம் போன்ற இருண்ட கெத்சனேயில்
இறுதி வேளையில் ஜெபித்தீர்
இரத்த வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே - அந்த
இரவெல்லாம் ஜெபித்தீரையா - இந்த ஜெப
மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து - உம்
மகிமையை அளித்தீரைய்யா
அன்று போல உம் தரிசனம் எமக்கருளும் - எங்கள்
அருமை ஆண்டவர் ஏசையா - இந்த ஜெப
சரீரமோ பெலவீனம் ஆவியோ உயிர்ப்பிக்கும்
சலிப்பின்றி ஜெபித்திடுவோம்
அந்தி சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே - நல்ல
அருள் ஆவிவரம் தாருமே - இந்த ஜெப
ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திட
ஊக்கமாய் ஜெபம் செய்தாரே
பக்தன் மோசேபோல் ஜெயம் பெற ஜெபித்திடவே - நித்திய
பரனே கிருபை தாருமே - இந்த ஜெப
சிறைச்சாலை அடைப்பட்ட சீஷனை விடுவிக்க
சபையாரும் ஜெபித்தனரே
அன்று பேதுரு வெளிவந்த அதிசயம் போல் பதில்
அளித்தெங்கள் ஜெபங்கேளுமே - இந்த ஜெப
உபவாச ஜெபமூலம் அகாஸ்வேரு ராஜனின்
உளமதைத் திருப்பினாளே
எஸ்தர் ராணி தன் ஜெபங்கேட்டு தயவடைந்தாள் என்றும்
எமக்குந்தன் தயை தாருமே - இந்த ஜெப
உயர் கர்மேல் மலைமீது ஜெபித்திடும் எலியாபோல்
துயருற்ற மகள் அன்னாள் போல்
தாசன் தானியேல் எனும் பக்தர் பலர் ஜெபித்த - அந்த
தனி ஜெப வரந்தாருமே - இந்த ஜெப
நினையாத நேரத்தில் திருடன் போல் வருகிறேன்
நிதம் நீங்கள் விழித்திருங்கள்
என்று போதனை அளித்தீரே அதை நம்பியே வந்தோம்
எமக்குந்தன் பெலன் தாருமே - இந்த ஜெப