Skip to main content

ஜீவதேவனைத்துதித்திடுவோம் நாம் இராஜ இராஜனை வாழ்த்திடுவோம்


ஜீவதேவனைத்துதித்திடுவோம் நாம்
இராஜ இராஜனை வாழ்த்திடுவோம்
பரம அருளைத் தினமும் பெறவே
பரமனை நிதம் துதிப்போம்

சென்ற நாட்களில் அடைக்கலமாய்
தாங்கி நம்மை ஆதரித்தார்
ஜீவன் சுகமும் பங்குமானார்
தேவ தேவனைத் துதித்திடுவோம் ... ஜீவ

தீங்கு நாளில் துணையவரே
சோர்ந்த வேளையில் தாங்கினாரே
தேவ வார்த்தையை மகிமைப்படுத்தி
மகிழ்ச்சி அளித்தார் துதித்திடுவோம் ... ஜீவ

அன்பின் தேவனைத் துதித்திடுவோம்
அகிலமெல்லாம் சாற்றிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
வாழ்த்தித் துதித்துப் பாடுவோம் ... ஜீவ

அழைத்த பாதையில் நடத்திடுவார்
புதிய பெலனால் நிரப்பிடுவார்
முடிவு வரையும் காக்கும் தேவனை
ஆநுதினமே துதித்திடுவோம் ... ஜீவ

வானில் இயேசு தோன்றிடுவார்
வாரும் என்றே அழைத்திடுவோம்
மாசற்றோராய் மகிமை தேவனை
இன்றும் என்றும் துதித்திடுவோம் ... ஜீவ