முற்றிலும் அழகானவர்; எல்லோரிலும மா சிறந்தோர்; தேவாதி தேவனானவர், நேசக் கல்வார் நாயகன்
தேவாதி தேவனானவர், நேசக் கல்வார் நாயகன்
பல்லவி
கல்வாரி நாயகா,
என் உள்ளம் ஆட்கொண்டீர்
என்னை மீட்க மரித்தீர்
கல்வார் நாயகா!
காயப்பட்டு நொறுங்குண்டு பாவம் துக்கம் சுமந்தோராய்
நீசச் சிலுவையில் மாண்டார் துக்க கல்வாரி நாயகன்
ஜீவன் சமாதானம் ஈய சிறை யுற்றோரின் மீட்புக்காய்
இரத்தமாம் ஊற்றைத் திற்தார், இரக்கக் கல்வார் நாயகன்
நமக்காய் பெற்ற வரங்கள், சுத்தாங்கம் யாவும் நல்கிட
அன்பதாம் வெள்ளம் ஊற்றினார், தயாளக் கல்வாரி நாயகன்
உம்மை மகிமை மையமாய், கண்டு களிப்பேன் என்பதே
இவ்வுலகில் என் ஆறுதல், ஒப்பற்ற கல்வார் நாயகா
கண்ணாடிக் கடல் ஓரமாய், சேர்ந்து நின் அன்பில் ஓ மூழ்கியே
உம்மைப்போல் என்றும் இருப்பேன் மகிமைக் கல்வாரி நாயகா