Skip to main content

மங்கள கீதங்கள் பாடிடுவோம் மணவாளன் இயேசு மனமகிழ


மங்கள கீதங்கள் பாடிடுவோம்
மணவாளன் இயேசு மனமகிழ
கறை, திரை, நீக்கி, திருச்சபையாக்கி
காத்தனர் கற்புள்ள கன்னிகையாய்
பல்லவி
கோத்திரமே! யூதா கூட்டமே
தோத்திரமே! துதி சாற்றிடுவோம்!
புழுதியினின் றெம்மை உயர்த்தினாரே
புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்- கோத்திரமே

இராஜ குமாரத்தி Þதானத்திலே
இராஜாதி ராஜன் இயேசுவோடே
இன, ஜன, நாடு தகப்பனின் வீடு
இன்பம் மறந்து சென்றிடுவோம் - கோத்திரமே

சித்திர தையலுடை அணிந்தே
சிறந்த உள்ளான மகிமையிலே
பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
பாவைகளாகப் புறப்படுவோம் - கோத்திரமே

ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
அவர் மணவாட்டி ஆக்கினாரே
விருந்தறை நேச கொடி ஒளி வீச
வீற்றிருப்போம் சிங்காசனத்தில் - கோத்திரமே

தந்தத்தினால் செய்த மாளிகையில்
தயாபரன் ஏசு புறப்படுவார்
மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்
மன்னர் மணாளன் வந்திடுவார் - கோத்திரமே