Skip to main content

மன்னிக்க உம்மிடமே கெஞ்சுகிறேன் நான் மறுக்காமல் ஒருவிசை மன்னித்தருளும்


மன்னிக்க உம்மிடமே கெஞ்சுகிறேன் நான்
மறுக்காமல் ஒருவிசை மன்னித்தருளும்
மறைவான பாவங்கள் பல செய்தேன் நான்
மன்னிக்கும் தேவனில் உமக்கு நிகர் யார்

நன்மை செய்ய நல் விருப்பம் உண்டு
நடத்தி முடிக்கவோ பெலன் இல்லையே
என்னில் ஓர் நன்மை இல்லை கண்டேன்
எல்லாம் உம் கிருபையால் ஆகும் என்றேன் - மன்னிக்க

பாவத்தை ஜெயிக்க வாஞ்சையுண்டு
பரிதாபம் அனுதினம் வீழ்கின்றேன் நான்
சிலுவையைப் பார்த்து உயிரடைந்தேன்
சோராமல் பயணம் தொடர்ந்திடுவேன் - மன்னிக்க

ஓயாது அலைபோல் கவலை என்னை
அயராது அணுகியே நெருங்கிடுதே
தளர்ந்து திரும்ப மனமும் உண்டு
தைரியப்படுத்தும் ஆவி தாரும் - மன்னிக்க

பேதுருவைப் போல் மறுதலித்தேன்
யூதாசைப் போல் நான் காட்டிக் கொடுத்தேன்
ஆனாலும் யேசுவே அன்பு வைத்தீர்
பரபாசாம் எந்தன் சிலுவை ஏற்றீர் - மன்னிக்க

சூழ்நிலை உந்தன் குற்றம் செய்தேன்
அமைதியின்றி சிறையில் வாழ்கின்றேன் நான்
இங்கேயும் இயேசுவே இருக்கின்றீர் நீர்
என் வாழ்வை இன்றே தந்திட்டேன் நான் - மன்னிக்க