Skip to main content

மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம் மகிழ்வுடன் நிதமே துதித்தே


மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்
மகிழ்வுடன் நிதமே துதித்தே
கனிவுடன் பணிவுடன்
வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம்

வாசல்களில் நல் துதியுடனே
புகழ்ந்து பாடி வணங்கிடுவோம்
மகிபனை வல்லவரை
மகிழ்ந்து நாமே துதித்திடுவோம் - மகிமை

நன்றியுடன் உம் சன்னிதியில்
நன்மையாவும் உணர்ந்திடுவோம்
உத்தமமாய் உண்மையுடன்
என்றென்றும் நாமே துதித்திடுவோம் - மகிமை

செடியாம் நம் இயேசுவிலே
நிலைத்திருந்து வளர்ந்திடுவோம்
நற்கனியால் நிறைந்துமே
இரட்சகரை நாம் உயர்த்திடுவோம் - மகிமை