Skip to main content

மா தயவே தேவ தயவே மானிலத்தில் தேவை எனக்கே


மா தயவே தேவ தயவே
மானிலத்தில் தேவை எனக்கே

வாக்களித்த வானபரன்
வாக்கு மாறார் நம்பிடுவேன்
நம்பினோரை கைவிடாரே
நற்பாதமே சரணடைந்தேன் - மா

இயேசுவின் பொன் நாமத்தினால்
ஏதென்கிலும் கேட்டிடினும்
தம் சித்தம் போல் தந்திடுவார்
தந்தையிவர் எந்தனுக்கே - மா

சத்துருக்கள் தூஷித்தாலும்
சக்தியீந்தென் பட்சம் நிற்பார்
ஆதரவே அளித்திடுவார்
ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் - மா

என்னில் ஏதும் பெலனில்லையே
எந்தனுக்காய் இராப்பகலாய்
நீதியுள்ள நேசர் இயேசு
நிச்சயமாய் பரிந்துரைப்பார் - மா

தாய் வயிற்றில் இருந்த முதல்
தமக்காய் என்னை தெரிந்தெடுத்தார்
என் அழைப்பும் நிறைவேற
எப்படியும் கிரியை செய்வார் - மா

தம் வருகை தரணியிலே
தாமதமாய் கடந்திடினும்
சார்ந்தவரை அனுதினமும்
சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் - மா