Skip to main content

மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே அனுபல்லவி


மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே

அனுபல்லவி
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாராரே - மேக

ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலாகமே செல்ல
மேதினியை விடுவார் - மேக

கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே - மேக

பாடுபட்டோர்க்குப் பலனளிப்பபாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனை
கூஜீயே கொடுத்திடுவார் - மேக

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார்
ஆண்டவரே அறிவார் - மேக

ஆயிரமாயிரம் அவரது வசனங்கள்
அதை அறிவிக்கின்றதே
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளெல்லாம்
அதையே அறிவிக்கின்றார் - மேக

ஆயிர வருடம் ஆளகை செய்வார்
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும்
ஜோதியின் ஆளுகையில் - மேக

அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந்தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே - மேக