Skip to main content

மாறிடார் எம்மா நேசரே ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே


மாறிடார் எம்மா நேசரே ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே
ஆ இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே

பாவியாக இருக்கையிலே - அன்பாய்
பாரில் உன்னைத்தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாமற்றிடவே - ஆ! இயேசு

உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - நம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே - ஆ! இயேசு

ஆவியால் அன்பை பகர்ந்திட - தூய
தேவனின் விண்சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க - ஆ! இயேசு

நியாய விதிதினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே - ஆ! இயேசு

பயமதை நீக்கிடுமே - யாவும்
பாரினில் சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே - ஆ! இயேசு