Skip to main content

மகிமை தேசமே எந்தனின் சொந்தமே விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன்


மகிமை தேசமே எந்தனின் சொந்தமே
விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன்

என்னையும் தேடி அன்பாக வந்தவர்
தன்னையும் பூவில் அன்பாக தந்தவர்
எந்நாளும் அஞ்சிடேன், என்றென்றும் வெல்லுவேன்
ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன் - மகிமை

தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே
தேவனின் சேவை எந்நாளும் செய்திட
தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே
தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன் - மகிமை

உண்மையும் நேர்மை எந்நாளும் காத்துமே
என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன்
தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்
எந்நாளும் மகிழ்ச்சியை அடைந்திடுவேன் - மகிமை