Skip to main content

மாறாத நல் விசுவாசம் - பரன் நம் ஏசு தேவனில் வைத்திடுவோம்


மாறாத நல் விசுவாசம் - பரன்
நம் ஏசு தேவனில் வைத்திடுவோம்
அகன்றிடும் மலைகளும்
அதிசயம் வெளிப்படும்

விசுவாச வார்த்தையினால்
இதயம் நிரம்பி வழிந்திடுமே
அகமதினில் விசுவாசம்
என்றும் ஜெயம் தரும் - 2

கிரியை இல்லா விசுவாசம்
ஏதும் செய்திட உதவாது
செயல் படுமே விசுவாசம்
என்றும் ஜெயம் தரும்

லோகமதின் இன்பங்களை
விரும்பி மனதில் தொடராமல்
விசுவாசத்தால் பெலன் அடைவோம்
நல் தேவன் தாங்குவார்